ஊடல்

உன்னோடு ஊடல் கொள்ளும் “ஒவ்வொரு நொடியும் …
ஓராயிரம் தீப்பிழம்பாய்” உள்ளுக்குள் கொதிக்கிறேன் …
காதலில் புரிதல் பிழை !!!

உணர்ச்சி

உன் தேவை நிறைவேற்ற வாய்மொழிகள் உதிர்த்தாயே …
தேவையது தீர்ந்தபின்னே நேரம் தர மறந்தாயே …
உணர்ச்சிகளை உரசிப்பார்க்க யாரும் இங்கு பொம்மையல்ல …
நீ சொல்லும் காரணங்கள் எதுவுமே உண்மையல்ல !!!

ஆண் நிலா

உன் மார்புச் சூட்டின் உஷ்ணம் …
ஓராயிரம் காதல் அர்த்தங்களைச் சொல்லும் …
உன்னவளுக்கு ! நீ வெப்பம் தரும் ஆண்நிலா !!!

முன்னேறு

நேர்மறை பாராட்டுகள் மட்டுமல்ல …
எதிர்மறை விமர்சனங்களும் …
உனக்குள் இருக்கும் ஒருவனை “ஒருத்தியை” முன்னே(ற்)றத் தூண்டும் வெறித்தனம் !!!

காதல்

உணர்விலே உறவாடி …
நினைவிலே நிதம்தேடி …
உள்ளத்தில் உன்மத்தம் கொண்டு …
அவனு(ளு)ள் தொலைத்து அவளு(னு)ள் தேடும்
விடை தெரியா புதிர்தான் காதலா ???

மீள்வோமா

நீலக்குறிகளும் …
கடைசி காணலும் …
மானிடர் எண்ணங்களின் அர்த்தத்தை நிர்ணயிக்கும் இயந்திரத்தருணம் இது …
மீள்வோமா ???

பார்வை

மனிதர்கள் நாம் வெறுப்போடு பார்க்கையில் கடினமானவர்களாகவும்…
அன்போடு பார்க்கையில் கனிவானவர்களாகவும்… தோன்றுகிறார்கள்! பார்வை ???

அஃறிணை

விலங்குகள் கூடும்!
அச்சப்படும்..
இரைத்தேடும்;
மனிதர்கள் கூடுவார்கள் !
அச்சமின்றி
இரையாக்குவார்கள்..
சகமனிதர்களை;
யார் அஃறிணை ???