கண்கள்

உன் காந்தக் கண்கள் மிகவும் பிடிக்கும் என்றேன்…
கண்கள் மட்டும் தானா என்கிறாய்…
நீ இமைக்காத ஒவ்வொரு நொடியும் என்னை அப்படியே விழுங்குபவை அழகிய கண்கள் தானே ???

காமம்

முகம் தெரியாமல்… குணம் அறியாமல்…
உணர்ச்சிகளின் போதையால்… தனிமையின் தேடலால்…
எழுத்துக்களின் குவியலாய்…
“உருப்பெற்ற ஊடகக் காதல்”
உண்மையில் காதலா ???
இல்லை காமப்பிழையா ???

நிலவுப் பெண்

நிசப்தமான நீலவானம் …
நிலவுப் பெண்ணின் அழகு தரிசனம் …
அருகில் குறும்பு பார்வையோடு என்னவள் …
நிலவை ரசிக்கவோ … என் பெண்ணிலவை ரசிக்கவோ … பித்தனாக நான் !!!

ஐம்புலன்

கண்ணிரண்டும் கவியெழுத …
காதுமடல் கூச்செரிய …
மூக்கின் நுனி முகம்பதித்து …
வாய் முத்தயுத்தமிட …
மெய்யோடு கதைபேசி
ஆள்வோமா ???
இல்லை…
அடக்குவோமா ???
ஐம்புலனை !!!

நேசம்

என்னை விலக்கி விலகிச் சென்றாலும் …
உன்னை விலகாமல் தொடரும் என் நேசம் …
உயிர்க்கொண்ட மாயக் காதலாய் !!!

பிம்பம்

சொல்வதை எல்லாம் கேட்கிறேன் என்று …
நினைப்பதை எல்லாம் சொல்லாதே …
மனமெனும் கண்ணாடி … மீண்டும் எதிரொலிக்கும் பிம்பமாய் !!!

நெருக்கம்

தள்ளி தள்ளிப்போகிறாய் …
நெருங்கி நெருங்கி வருகிறேன் …
தாயைத் தேடுகிற குழந்தையைப் போல …
உன் மார்போடு அணைத்து தாலாட்டுவாயா ???

மெளனம்

தெரியாமல் செய்கிறாயா …
இல்லை தெரிந்தே கொல்கிறாயா …
புரியாமல் தவிக்கிறேன் நான் …
மெளனம் தான் உந்தன் ஆயுதமா ???